வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 18 ஜூன் 2022 (14:39 IST)

15 ஆண்டுகளாக டி 20 போட்டியில் விளையாடும் தினேஷ் கார்த்திக்…. நேற்றைய போட்டியில் செய்த சாதனை!

இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்திய அணிக்காக கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு கிடைதததில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தற்போது டி 20 அணியில் அவர் ஆடி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அவர் 27 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

2006 ஆம் ஆண்டு இந்தியா விளையாடிய முதல் டி 20 போட்டியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் அவர் முதல் முதலாக டி 20 போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். அவரோடு முதல் போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் தற்போது ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.