வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 11 ஜூன் 2016 (16:38 IST)

ஜாஸ்பிரிட் பும்ராவின் வேகத்தில் வீழ்ந்தது ஜிம்பாப்வே - 168 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 168 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 

 
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று ஹராரேயில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி ஜிம்பாப்வே அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக எல்டன் சிகும்பரா 41 ரன்களும், சிகந்தர் ரஸா 23 ரன்களும், எர்வின் 21 ரன்களும் எடுத்தனர்.
 
இந்திய அணியின் அபரிமிதமாக இருந்தது. ஜாஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் மற்றும் தவன் குல்கர்னி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அக்‌ஷர் பட்டேல் மற்றும் யுவேந்திரா சாஹல் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.