திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 17 மார்ச் 2023 (10:24 IST)

“சாம்பியன் திரும்பி வருவான்…” ரிஷப் பண்ட்டை சந்தித்த யுவ்ராஜ் ட்வீட்!

சில மாதங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார் ரிஷப் பண்ட். இதையடுத்து அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மெல்ல மெல்ல அவர் குணமாகி வருகிறார்.

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் நடக்க ஆரம்பித்த அவர், இப்போது அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு சென்றுள்ளார். நீச்சல் குளத்தில் கைத்தடி உதவியோடு நடக்க ஆரம்பித்துள்ளார். அவர் வேகமாக உடல்நலம் பெற்றாலும், கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இன்னும் ஒரு ஆண்டாவது ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ரிஷப் பண்ட்டை சந்தித்துள்ள முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங், அவரோடு எடுத்துக்கொண்ட புகைபப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ரிஷப் பண்ட் பற்றி “என்ன ஒரு நேர்மறையான வீரர்.  சாம்பியன் மீண்டும் திரும்பி வருவார். உங்களுக்கு மீண்டும் அதிக சக்தி கிடைக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.