1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 12 மார்ச் 2015 (10:05 IST)

உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்காட்லாந்து வீரர்

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை சாய்த்து ஸ்காட்லாந்து வீரர் ஜோஷ் டேவி முதலிடத்தில் உள்ளார்.
11 ஆவது உலகக் கோப்பை திருவிழா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணியால் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியவில்லை. 
 
ஏன் இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பை போட்டியிலும் ஒரு வெற்றியைக் கூட கண்டதில்லை என்பது பெரும் சோகமான நிகழ்வு தான். எனினும் துன்பத்திலும் ஒரு இன்பம் போல் ஸ்காட்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டேவி, தற்போதைய உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்து முதலிடத்தில் உள்ளார். 
 
இதுவரை ஜோஷ் டேவி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2 ஆவது இடத்தில் நியூசிலாந்து அணியின் டிரென்ட் பவுல்ட் மற்றும் டிம் சவுதி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 3 ஆவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டார்க், நியூசிலாந்து அணியின் வெட்டோரி மற்றும் இந்தியா அணியின் ஷமி ஆகியோர் 12 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.