1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2024 (09:26 IST)

டெஸ்ட்டை டி20 மாதிரி விளையாடுவீங்களா.. நல்லதா போச்சு..! – இங்கிலாந்து வீரர்களுக்கு பும்ரா பதிலடி!

பூம்ரா
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் இங்கிலாந்து வீரர்களின் கருத்துகளுக்கு இந்திய பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரிட் பும்ரா பதிலடி கொடுத்துள்ளார்.



இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ம் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான சுற்று போட்டியான இதில் வெற்றி பெறும் முனைப்புடன் இரு அணிகளும் உள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எந்த அணிகளும் வீழ்த்தியதில்லை.

எனினும் இந்தியாவுடனான இந்த டெஸ்ட் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து வீரர்கள், தாங்கள் தற்போது டெஸ்ட் போட்டிகளையே டி20 போட்டிகள் போல அதிரடியாக விளையாடுவதால் இந்தியாவை கண்டிப்பாக வீழ்த்தி காட்டுவோம் என தெரிவித்துள்ளனர்.


இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள இந்திய அணி பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரிட் பும்ரா “பேஸ்பால் கிரிக்கெட் என்ற சொல்லுடன் எனக்கு அவ்வளவாக தொடர்பில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக விளையாடுவது எப்படி என அவர்கள் உலகுக்கு காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆக்ரோஷமாக ரன்களை குவிக்கும் முனைப்பில் எடுக்கும் அவசர முடிவுகளில் அவர்களது விக்கெட்டுகள் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இதுபோன்ற அம்சங்கள் எப்படி அணிக்கு சாதகமான பயன்படுத்துவது என நான் சிந்திப்பேன்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K