நடுவரை தகாத வார்த்தையால் திட்டி தீர்த்த கிரிக்கெட் வீரர்: 7 ஆண்டுகள் விளையாட தடை
மேற்கிந்திய தீவுகள் உள்ளூர் தொடரான பிரீமியர் தொடரில் கொவோன் பப்ளர் என்ற வீரர் நடுவரின் தீர்பால் அதிருப்தி அடைந்து அவரை தகாத வார்த்தையால் திட்டி தீர்த்துள்ளார். இதனால் அவருக்கு 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் உள்ளூர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் வில்லோ கட்ஸ் மற்றும் பெய்லிஸ் பே அணிகள் மோதிய போட்டியின் போது நடுவரின் தீர்ப்பால் அதிருப்தி அடைந்த வில்லோ கட்ஸ் அணியின் கெவோன் பப்ளர் ஸ்டம்புகளைத் தகர்த்ததுடன் நடுவரை தகாத வார்த்தைகளால் அர்சித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய பெர்முடா கிரிக்கெட் சங்கம் கெவோன் பப்ளர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட 7 ஆண்டுகளுக்கு தடை விதித்தது.