1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. David warner entry with helicopter for big bash match

பிக்பாஷ் விளையாட ஹெலிஹாப்டரில் வந்திறங்கி எண்ட்ரி கொடுத்த டேவிட் வார்னர்!

டேவிட் வார்னர்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

இப்போது அவர் டி 20 சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஜூன் மாதம் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்கும் நிலையில் அதோடு ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக இப்போது பிக்பாஷ் தொடரில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

பிக்பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடும் வார்னர் சிட்னி மைதானத்துக்கு ஹெலி காப்டரில் வந்திறங்கினார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
அதிகமுறை டக் அவுட் ஆன ரோஹித் சர்மா… இதிலுமா சாதனை?