”வீரேந்திர சேவாக் நீண்ட காலம் அற்புதமாக விளையாடியவர்” - டிராவிட் பெருமிதம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 17 ஆகஸ்ட் 2015 (16:14 IST)
வீரேந்திர ஷேவாக் நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையில், அற்புதமாக விளையாடிவர் என்று இந்திய ‘ஏ’ அணிக்கு பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
 
 
இது குறித்து ஒரு பேட்டியில் ராகுல் டிராவிட் கூறுகையில், ”ஆக்ரோஷமோ, நிதான ஆட்டமே அது நீங்கள் கொடுக்கும் முடிவைப் பொறுத்தான் தீர்மானிக்கப்படும். கிரிக்கெட் விளையாட்டு என்பது செயல்பாடு குறித்தது. இது ரன்கள் குவிப்பதையும், விக்கெட்டுகள் வீழ்த்துவதையும் குறித்தது. இது நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதை பொறுத்தது.
 
இதற்கென்று எந்த ஃபார்முலாவும் கிடையாது. கிரிக்கெட் வரலாற்றையே நாம் பார்த்தோமானால், வீரர்கள் தங்களின் பல்வேறு விளையாடும் உத்திகள் மற்றும் பாணிகளை மூலமாகவே வெற்றி அடைந்துள்ளனர்.
 
வீரேந்திர ஷேவாக் நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையில், அற்புதமாக விளையாடியுள்ளதை நீங்கள் பார்க்கலாம். அவரது சராசரி 50க்கும் மேல் இருக்கும். வெற்றி என்பது என்ன? நீங்கள் வெற்றியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.
 
மேலும், இன்றைய காலகட்டத்தில் நீண்ட வடிவிலான போட்டிகளில் வீரர்கள் குறைபாடான மனநிலையில் உள்ளார்களா? என்று கேள்வி எழுப்பியபோது, “உங்களால் எப்படி அவ்வாறு கூறமுடியும்? டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி எடுத்துக் கொண்டால் குறைபாடான மனநிலையில் விளையாடுவதை போலவா தெரிகிறது?
 
விராட் கோலியும், சத்தீஸ்வர் புஜாராவும் இணைந்து ஏழுக்கும் மேற்பட்ட சதங்கள் குவித்திருக்கிறார்கள். அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று கூறவில்லை” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :