திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2018 (16:15 IST)

ஒரே போட்டியில் விராட் கோலி விரட்டி பிடித்த சாதனைகள்!

நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித்தந்தார்.
 
இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 160 ரன்கள் சேர்த்து தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டார். இந்த ஒரே போட்டியில் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
 
* 159 பந்துகளை சந்தித்து 160 ரன்கள் குவித்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக 150 பந்துகளைச் சந்தித்து சாதனை படைத்திருக்கிறார்.
 
* ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த எட்டாவது வீரர் கோலி.
 
* 159 பந்துகளை சந்தித்து 160 ரன்கள் குவித்த விராட் கோலி பவுண்டரிகள் இல்லாமல் ஓடியே 100 ரன்கள் சேர்த்துள்ளார்.
 
* கேப்டனாக தனது 46-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விராட் கோலி 12 சதங்களை அடித்துள்ளார். இதன்மூலம் முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார். கங்குலி 147 போட்டிகளில் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் 22 சதங்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார்.
 
* தென் ஆப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்துள்ளார் கோலி.