செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (22:36 IST)

பந்து வீச்சாளர்களுக்கு பிசினஸ்கிளாசை விட்டுக் கொடுத்த விராட் கோலி, ரோஹித்

Rohit sharma
டி-20 உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

பல அணிகள் போட்டியிட நிலையில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறிவிட்டதால், அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா , இங்கிலாந்து, பாகிஸ்தான்  அணிகள் மோதவுள்ளன.

வரும் 10 ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிராக மோதவுள்ளது. இதற்காக இன்று இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.

இந்த  நிலையில்,  அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக இன்று இந்திய அணியினர் அடிலெய்ட் நகருக்குச் சென்றனர். அப்போது, விமானத்தில், பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு தேவை என்பதியால், விமானத்தில், அவர்கள் கால்களை நீட்டி அமரும் வகையில், பிசினஸ் கிளாஸ் இருக்கையை நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித்சரமார், ராகுல் டிராவிட் உள்ளிட்ட வீரர்கள் விட்டுக் கொடுத்துள்ளனர்.

அதாவது, ஐசிசி விதிகளின்படி, ஒரு  அணியில் 4 பேருக்கு மட்டும்தான் பிசினஸ் கிளாஸ் இருக்கை வழங்கப்படும் நிலையில், கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் டிராவிட், கோலி ஆகியோர் இந்த செயலைச் செய்துள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.