வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 22 ஜூன் 2022 (16:18 IST)

விராட் கோலிக்கு கொரோனா தொற்றா? அதிர்ச்சி தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்கான அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இது சமம்ந்தமாக அணி வீரர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்த தொடரில் கலந்துகொள்ள சென்ற இந்திய முன்னாள் கேப்டன் கோலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் குடும்பத்தோடு கோலி, மாலத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அணிக்கு திரும்பி இருந்தார்.

ஏற்கனவே இந்திய வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.