வார்னேயின் சிறந்த உலக அணியில் ஒரே ஒரு இந்தியருக்கு மட்டுமே வாய்ப்பு!


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 18 ஜூன் 2016 (16:39 IST)
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே சிறந்த டி 20 உலக அணியினை வெளியிட்டுள்ளார்.
 
 
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் 11 பேர் கொண்ட உலக அணியினை வெளியிட்டுள்ளார். அதில் முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் உள்ளார். அவரை தொடர்ந்து நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லமும், மூன்றாவது இடத்தில் இந்தியாவின் விராட் கோலி உள்ளார்.
 
இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நான்கு பேர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கெய்லை தொடர்ந்து, ஆல் ரவுண்டர் வெய்ன் பிராவோ, ஆண்ட்ரூ ரஸ்ஸல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஷேன் வாட்சன் மற்றும் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்கா அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் பட்லர், வங்கதேச வீரர் முஸ்தபிஷூர் ரஹ்மான் இடம் பெற்றுள்ளனர்.
 
இந்தியா தரப்பில் விராட் கோலி மட்டுமே இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தான் மற்றும் இலங்கை வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :