சச்சின் சாதனையை எளிதாக முறியடித்த கோலி


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 7 ஜூலை 2017 (13:29 IST)
சேசிங்கில் அதிக சதம் அடித்த சச்சின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எளிதாக முறியடித்துள்ளார்.

 

 
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இதைத்தொடர்ந்து நடந்த 2 மற்றும் 3வது போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. 4வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிப் பெற்றது. நேற்று நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியது.
 
இறுதி போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். இதன்மூலம் அவர் சச்சின் சாதனையை முறியடித்தார். சேசிங்கில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கொண்டிருந்தார் சச்சின். அவர் இதுவரை 17 சதங்கள் அடித்துள்ளார்.
 
விராட் கோலி நேற்று அடித்த சதம் மூலம் 18 சதங்கள் அடித்துள்ளார். மேலும் சச்சின் 17 சதங்கள் அடிக்க 232 இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளது. ஆனால் விராட் கோலி 102 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக்கொண்டார். விராட் கோலி ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டியில் இதுவரை 28 சதங்கள் அடித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :