கோலியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மாற்றம்.. வான வேடிக்கை மட்டும்!
கடந்த 10 ஆண்டுகளில் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முதன்மையானவர் விராட் கோலி. தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கோலி நவம்பர் 5 ஆம் தேதி தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். அன்று இந்திய அணி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.
அன்றைய நாளை சிறப்பாக கொண்டாட விரும்பும் கொல்கத்தா கிரிக்கெட் வாரியம் போட்டியை பார்க்க வரும் 70000 ரசிகர்களுக்கும் கோலி முகம் பதித்த முகமூடிகளை வழங்க உள்ளதாகவும், சிறப்புமிக்க கேக் ஒன்றை வெட்ட உள்ளதாகவும், மேலும் கோலிக்காக லேசர் ஷோ ஒன்றை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ஐசிசி யிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது இந்த கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது எனவும், வீரர்களின் ஓய்வறையில் கேக் வெட்டுதலும், மைதானத்தில் வான வேடிக்கை மட்டுமே நடத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்க் அணியும் நிகழ்வு நடக்காது என சொல்லபடுகிறது.