வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 28 மார்ச் 2015 (15:40 IST)

ஜோடியாக கைகோர்த்தபடி விமான நிலையம் வந்திறங்கிய கோலி மற்றும் அனுஷ்கா சர்மா

உலகக்கோப்பை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் விமான நிலையத்தில் கைகோர்த்தபடி வந்திறங்கினர்.
 
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை [29-03-15] ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியோடு நிறைவடைகிறது. இந்த தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியது.
 

 
கடந்த 26ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2ஆவது அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 328 ரன்கள் குவித்தது.
 

 
இந்த கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில், இலக்கை துரத்திப் பிடிப்பதில் வல்லவரான விராட் கோலி மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. மேலும், அனுஷ்கா சர்மா வந்திருந்ததும் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.
 
அதற்கேற்றார்போல் விராட் கோலி களமிறங்கியபோது மைதானத்தில் இருந்த அனுஷ்கா சர்மா கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். இதனால் மைதானம் பரபரப்பானது. இந்நிலையில் விராட் கோலி 13 பந்துகளில் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

கோலி அவுட்டானபோது அனுஷ்கா சர்மா முகத்தில் சோகம் அப்பிக்கொண்டது. அனுஷ்கா சர்மா கன்னத்தில் கை வைத்தப்படி உறைந்து போனார். புகைப்படக்காரர்கள் அவரது முகத்தை திரையில் காட்டி கொண்டே இருந்தனர்.
 

 
இதனால், கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை இணையத் தளங்களில் வறுத்து எடுத்து விட்டனர். சில இடங்களில் விராட் கோலியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். மேலும், அனுஷ்கா சர்மாவின் புகைப்படங்களையும் எரித்தனர்.
 

 
இந்நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் ஜோடியாக வந்திறங்கினர். இருவரும் கைகோர்த்தபடி ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். கோலி அனுஷ்காவை பாதுகாத்து அழைத்துச் சென்று, காரில் அமரச் செய்தார். பின்னர் இருவரும் காரிலேயே பறந்து சென்றனர்.