முதலிடத்தில் விராட் கோலி: ஐசிசி அறிவிப்பு


Caston| Last Modified செவ்வாய், 29 மார்ச் 2016 (21:03 IST)
20 ஓவர் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இன்று வெளியிட்ட ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

 
 
உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் முதலிடத்தில் இருந்தார். அவரை விட 24 புள்ளிகள் பின் தங்கி 2-ஆம் இருந்தார் விராட் கோலி.
 
இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார் விராட் கோலி. குறிப்பாக நேற்று முன் தினம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார் விராட் கோலி.
 
இந்நிலையில் இன்று 20 வீரர்கள் தரவரிசையை ஐசிசி வெளியிட்டது. அதில் ஆரோன் பிஞ்சை விட 68 புள்ளிகள் அதிகம் பெற்று 871 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். 803 புள்ளிகளுடன் ஆரோன் பிஞ்ச் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
 
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் அஸ்வின் இரண்டு இடங்கள் சறுக்கி மூன்றாம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் சாமுவேல் பத்ரி உள்ளார்.
 
அணிகளின் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் அணி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :