1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 9 டிசம்பர் 2024 (12:17 IST)

படிப்புதான் எப்பவும் கைகொடுக்கும்… முனைவர் பட்டம் பெற படிக்கிறேன் –வெங்கடேஷ் ஐயர் பேச்சு!

ஐபிஎல் தொடரின் மூலம் கவனம் பெற்ற வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் இடம்பிடித்தார் வெங்கடேஷ் ஐயர், ஆனால் இந்திய அணியில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால் இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சமீபத்தில் நடந்த ஏலத்தில் 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  தற்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “நீங்கள் உயிரிழக்கும் வரை கல்விதான் எப்போதும் கூட இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரரால் 60 வயது வரை விளையாட முடியாது. கல்வி அறிவுதான் மைதானத்தில் கூட சரியான முடிவை எடிக்க உதவும். நான் இப்போது முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் டாக்டர்  வெங்கடேஷாக இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.