1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Vaibhav suryavanshi cant play for india another year

வைபவ் சூர்யவன்ஷியால் இன்னும் ஓராண்டுக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது?... ஏன் தெரியுமா?

வைபவ் சூர்யவன்ஷி
நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டி இந்த சீசனின் மறக்க முடியாதப் போட்டியாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து உலகக் கிரிக்கெட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். பவுலர்களைக் கொஞ்சம் கூட மதிக்காமல் அனைத்துப் பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பும் பேராசையோடு நேற்று வைபவ்வின் இந்த இன்னிங்ஸ் அமைந்தது. அவரின் இந்த இன்னிங்ஸ் பல முன்னாள் ஜாம்பவான்களையே ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துள்ளது.

அவரின் இந்த இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லுக்குப் பிறகு குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார். மேலும் குறைந்த பந்துகளில் ஐபிஎல் சதமடித்த இந்திய வீரர் என்ற யூசுப் பதானின் (38 பந்துகளில்) சாதனையையும் முறியடித்துள்ளார்.

இதனால் அவர் விரைவில் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2020 ஆம் ஆண்டு பிசிசிஐ அறிவித்த புதிய விதியின் படி 15 வயது நிரம்பியவர்கள் மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியும். அதனால் தற்போது 14 வயதாகும் சூர்யவன்ஷி இன்னும் ஒரு ஆண்டுக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பின்னடைவு… இளம் வீரர் விலகல்!