திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (22:55 IST)

உலகக் கோப்பை தொடரில் இரு தமிழக வீரர்கள்...

உலகக் கோப்பை டி-20தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இதில், இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

விரைவில் உலகக் கோப்பை டி-20 தொடர் நடக்க உள்ள நிலையில்,    இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

கேப்டன் விராட் கோலி, துணைகேப்டன் ரோஹித் சர்மா, கே. எல்.ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷாப்பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ,அஸ்வின்,  வருண் சி ஆகியோர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்நிலையில் இத்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் அஸ்வின் ஆகிய இரு வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடராஜன் காயம் காரணமாக சிகிச்சையில் இருந்து மீண்டாலும் கூட அவர் இதுவரை நடந்த போட்டிகளில் இடம்பெறவில்லை.

 இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.