இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: வாஷ் அவுட் ஆன வங்கதேசம்

Last Modified புதன், 31 ஜூலை 2019 (22:25 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியை அடுத்து வங்கதேச அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஏற்கனவே இலங்கை அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் இன்று கொழும்புவில் மூன்றாவது போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 295 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 36 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தததால் இலங்கை அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்த தொடரில் இலங்கை அணியின் மூன்று போட்டிகளிலும் வென்றதால் வங்கதேச அணி வாஷ் அவுட் ஆனது
ஸ்கோர் விபரம்

இலங்கை : 294/8
50 ஓவர்கள்

மாத்யூஸ்: 87 ரன்கள்
மெண்டிஸ்: 54 ரன்கள்
கருரத்னே: 46 ரன்கள்
பெரரே: 42 ரன்கள்

வங்கதேசம்: 172/10 36 ஓவர்கள்

செளம்யா சர்கார்: 69
தாஜூல் இஸ்லாம்: 39
அனாமுல் ஹக்: 14
முசாஃபிர் மிதுன்: 10

ஆட்டநாயகன்: மாத்யூஸ்


இதில் மேலும் படிக்கவும் :