லார்ட்ஸ் டி20 போட்டி: உலக லெவன்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

s
Last Modified வியாழன், 31 மே 2018 (15:26 IST)
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஐசிசி உலக லெவன்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

 
 
கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் இர்மா மற்றும் மரியா புயல் தாக்கியதில் அங்குள்ள 5 மைதானங்கள் பலத்த சேதமடைந்தன. இதனால் மைதானத்தை புதுப்பிப்பதற்காக நிதி திரட்டும் நோக்கில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஒரே ஒரு டி20 போட்டி நடைபெறுகிறது.
 
இதில் பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், அப்ரிடி தலைமையிலான ஐசிசி உலக லெவன் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
t
 
இந்திய அணி சார்பில் தினேஷ் கார்த்திக் மற்றும் முகமது ஷமி ஆகியோர் உலக லெவன் அணிகளுக்காக விளையாடுகின்றனர். முதலில் உலக லெவன் அணிக்கு கேப்டனாக இயான் மார்க்கன் அறிவிக்கப்பட்டு பின்னர் காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :