1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Today match between CSK and RCB

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? – சிஎஸ்கே – ஆர்சிபி இன்று மோதல்!

IPL
நடந்து வரும் ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.

நடப்பு ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக தொடங்கி நடந்து வரும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, மறுபக்கம் விசில் போடு சென்னை சூப்பர் கிங்ஸும், இ சாலா கப் நமதே ராயல் சேலஞ்சர்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 போட்டிகளிலும் வென்று தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் முதல் போட்டியில் தோற்றாலும், அடுத்த அனைத்து போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே வென்று முதலிடத்தை பிடிக்குமா அல்லது தொடர்ந்து வெற்றி பெற்று ஆர்சிபி முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இன்றைய போட்டி பரவலாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனாவிலிருந்து மீண்ட சச்சின்; ப்ளாஸ்மா தானம் செய்வதாக தகவல்!