1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 மார்ச் 2018 (11:30 IST)

முத்தரப்பு டி20 போட்டி: இலங்கையை பழிதீர்க்குமா இந்தியா?

இலங்கை கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இலங்கை- இந்தியா மோதும் நான்காவது நிதாஸ் டிராபி முத்தரப்பு டி20 போட்டி இன்று  நடைபெறுகிறது.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி  கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது.
 
முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மூன்றவது போட்டி இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் வங்காளதேச அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி
 
இந்நிலையில் இலங்கை - இந்தியா மோதும் நான்காவது முத்தரப்பு டி20 போட்டி இன்று 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் போட்டியின் தோல்விக்கு இந்திய அணி இலங்கை அணியை பதிலடி கொடுக்கும் என இந்திய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.