1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (13:20 IST)

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடக்க ஆட்டம்: திண்டுக்கல்- திருச்சி இன்று மோதல்

8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இன்று விளையாடவுள்ளது.
 
ஐபிஎல் கிரிக்கெட் போலவே டி.,என்.பி.எல் என்னும்  தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டி தொடரில் தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், கோவை, காரைக்குடி, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
 
இன்று தொடங்கும் இந்த போட்டிகள் லீக் போட்டிகள், முதல் தகுதி சுற்று, வெளியேற்றுதல் சுற்று, 2-வது தகுதி சுற்று மற்றும் இறுதி போட்டி என அடுத்தடுத்த சுற்றுகள் இருக்கும்.
 
இதுவரை நடந்த இரண்டு டி.என்.பி.எல் தொடரில் தூத்துக்குடி அணியும், சேப்பாக் அணியும் தலா ஒருமுறை சாம்பியன்பட்டம் வென்றுள்ளது.
 
இன்றைய தொடக்கவிழா போட்டியில் சூப்பர் சிங்கர் குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையடுத்து நடக்கும் தொடக்க ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்யும், பாபா இந்த்ராஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் விளையாடவுள்ளது.