ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2024 (08:36 IST)

ஓய்வை அறிவித்த நியுசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்!

நியுசிலாந்து அணிக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருபவர் டிம் சவுத்தி. இதுவரை அவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 384 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நியுசிலாந்து அணிக்கு சில போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். விரைவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடரோடு அவர் ஓய்வு பெறவுள்ளார்.

104 போட்டிகளில் 385 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள அவர் 15 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களும் ஒருறை ஒரு போட்டியில் 10 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தியுள்ளார். தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுவார் என தெரிகிறது.