செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2024 (07:33 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று நடந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி மீது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானாலும், அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் அபாரமாக விளையாடினர்.

அபிஷேக் ஷர்மா 50 ரன்களும் திலக் வர்மா 107 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து, 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva