திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (11:34 IST)

இங்கிலாந்து அணியை பூட்டி வெச்சாதான் பாகிஸ்தான் ஜெயிக்கும்! – வசீம் அக்ரம் சொன்ன ட்ரிக்!

Wasim Akram
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடியவுள்ள சூழலில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் என பாக். முன்னாள் வீரர் வசீம் அக்ரம் கூறியுள்ளார்.



ஐசிசி உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகள் நிறைவை எட்டி வருகின்றன. தற்போது வரையிலான போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளன.

நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை மிகவும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. ஆனால் பாகிஸ்தான் எப்படி வெற்றி பெறுவது என்று பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் காமெடியான ஒரு ஐடியாவை சொல்லியுள்ளார் பாக். முன்னாள் வீரர் வசீம் அக்ரம்,

அதில் அவர் “இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து மிகப்பெரிய ஸ்கோரை குவித்துவிட வேண்டும். பின்னர் இங்கிலாந்து அணியை ட்ரெஸ்ஸிங் ரூமில் வைத்து பூட்டி மொத்தமாக டைம் அவுட் செய்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதி செல்ல முடியும்” என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Edit by Prasanth.K