வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2024 (07:53 IST)

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா கோப்பையை வென்ற நிலையில் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ளார்.



உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வந்த நிலையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்று தென்னாப்பிரிக்காவுடன் மோதி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த போட்டிகளில் ஆரம்பம் முதலே விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை அளிக்கவில்லை. அரையிறுதி போட்டிகளின்போதும் கூட அவர் 3 ரன்களே எடுத்து வெளியேறியது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஆனால் கோலி தனது ஆட்டத்தை இறுதிப் போட்டிக்காக சேமித்து வைத்துள்ளதாகவும், அதில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் அணி கேப்டன் ரோஹித் சர்மா நம்பிக்கையாக சொன்னார்.


அதேபோல இறுதிப்போட்டியில் 59 பந்துகளுக்கு 76 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார் விராட் கோலி. நீண்ட கால கனவான டி20 உலகக்கோப்பையை இந்தியா கையில் ஏந்தியுள்ள இந்த தருணத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் ஒரு சிறப்பான தருணத்தில் ஓய்வை அறிவிக்க இதுவே சரியான தருணம் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்கள் முழுவதும் விராட் கோலி கிரிக்கெட்டில் செய்த பங்களிப்புகளுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K