வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (09:39 IST)

இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி! – ருதுராஜ் கேப்பிடன்சி அபாரம்!

Asian Games Cricket
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் பிரிவில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.



சீனாவின் பெய்ஜிங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இதில் விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என இதுவரை 83 பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.

இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டும் இடம்பெற்றுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி பங்களாதேஷை 96 ரன்களில் மடக்கியது.

பின்னர் பேட்டிங்கில் இறங்கிய இந்திய அணி 9வது ஓவரிலேயே 97 ரன்களை குவித்து வெற்றியை ஈட்டியது. ஜெய்ஸ்வால் ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களையும், திலக் வர்மா 55 ரன்களையும் குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டிகளின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Edit by Prasanth.K