வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (12:12 IST)

குறி வெச்சா இரை விழனும்! தல தோனி கோப்பையை குறி வெச்சிட்டார்..! – ஹர்பஜன் சிங் ட்வீட்!

ஐபிஎல்லின் நடப்பு சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை அணி கோப்பைக்கு குறி வைத்துவிட்டதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.



நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகள் வரை விளையாடியுள்ள நிலையில் முதல் 4 இடங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 4ல் வெற்றி என்ற கணக்கில் உள்ளது. நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கேவின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் அனைத்துமே தரமாக அமைந்தன. நேற்றைய போட்டியில் தோனி இறுதி 4 பந்துகளுக்கு களமிறங்கி 20 ரன்களை குவித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.



சென்னை அணியின் வெற்றிக் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் “வரும்போதே தெரியனும் வர சிங்கம் தல தோனி.மெரினா பசங்க கிட்ட மெரைன் டிரைவ் ஆட்டம் செல்லுமா. ஐபிஎல் கோப்பைக்கு ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ்- னு ஒரு டீம் தோனி காட்டுற பாதையில., ரிட்டு தலைமையில கோப்பையை குறி வெச்சுட்டாங்கனு எல்லாரும் தெரிஞ்சுக்குறது நல்லது.” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே இது தோனிக்கு சிஎஸ்கேவில் கடைசி சீசனாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில் இந்த சீசனில் சென்னை அணி கோப்பையை மீண்டும் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K