முதல் முறையாக பாகிஸ்தான் தொடரை வென்று வங்கதேசம் வரலாற்று சாதனை


Mahalakshmi| Last Modified திங்கள், 20 ஏப்ரல் 2015 (11:12 IST)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை  முதல் முறையாக வங்கதேச அணி வென்று  சாதனை படைத்துள்ளது.
 
பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான். 
 
 
இதில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் களத்தில் தடுமாறியது. எனினும் அணியில் சோகைல், சாத் நசிம், ரியாஸ் ஆகியோர் சற்று நிலைத்து நின்று ஆடினர். இறுதியில் பாகிஸ்தான் அணி  50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது.
 
பின்னர் வங்கதேச அணி சேகிங்கை மேற்கொண்டு விளையாடியது. அணியில் இக்பால்- முஷ்பிகுர் ரம் ஜோடி பாகிஸ்தானின் பந்து வீச்சை சிதறடித்தனர். தொடர்ந்து அசத்திய இக்பால் தனது சதத்தை பதிவு செய்தார்.  116 ரன்களை சேர்த்த இக்பால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
இறுதியில் வங்கதேச அணி 38.1 ஓவரரில் 240 ரன்களை சேகரித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இதனால் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது வரலாற்று சாதனை படைத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :