1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

இந்திய அணிக்கு இன்னொரு வீரர் கிடைச்சாச்சு… ருத்துராஜ் கடந்து வந்த பாதை !

சென்னை அணிக்காக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக உள்ளார்.

போன சீசனிலேயே சிஎஸ்கே அணிக்காக எடுக்கப்பட்ட அவரை தோனி பயன்படுத்தவே இல்லை. அதுகுறித்து கேட்ட போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என சொல்லி விமர்சனங்களை சந்தித்தார். இந்நிலையில் இந்த சீசனில் ஓப்பனராக ஆடும் வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் சொதப்பினாலும் பின்னர் சுதாரித்த கணிசமான ஸ்கோர்களை எலல இன்னிங்ஸ்களிலும் குவிக்க ஆரம்பித்தார்.

முதலில் நிதானமாக ஆடி நிலைநிறுத்திக்கொண்டு கடைசிக் கட்டத்தில் அதிரடியில் ஈடுபடுவது என்ற ஸ்டைலில் கலக்கி வருகிறார் ருத்துராஜ். இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இப்போது இரண்டாம் இடத்தில் உள்ளார். கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த சதம் இந்திய அணிக்கு மேலும் ஒரு தொடக்க வீரர் கிடைத்துவிட்டார் என்பதையே காட்டுகிறது.