செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (13:43 IST)

இந்தியா vs பாகிஸ்தான் - T20ஐ வென்ற Captain தோனி!!

கடந்த 2007 ஆம் ஆண்டு இதே நாளில் தான் டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவுக்கு தோனி பெற்று தந்தார். 

 
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் திகழ்ந்த தோனி. கடந்த 2007 ஆம் ஆண்டு இதே நாளில் தான் டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவுக்கு தோனி பெற்று தந்தார். இதோ இன்று 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 
 
2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. செப்டம்பர் 24 ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களில் சேர்த்தது.

158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. அன்று இந்திய அணியின் இருந்து கேப்டனாக இருந்து கோப்பையை வென்று தந்த தோனி தற்போது இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.