திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (15:46 IST)

சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானில் இருந்திருந்தால்? பாக். முன்னாள் வீரர் கருத்து!

suryakumar yadav
சூரியகுமார் யாதவ் பாகிஸ்தானில் பிறந்து இருந்தால் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்காது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக சூர்யகுமார் யாதவ் வருகிறார் என்பதும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் அபாரமாக விளையாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் , சூர்யகுமார் யாதவ் குறித்து தெரிவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் 30 வயதுக்கு மேல்தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட தொடங்கினார் என அறிகிறேன். அவருக்கு நல்ல வாய்ப்பாக இந்தியா அணியில் இடம் கிடைத்துள்ளது.
 
ஒருவேளை அவர் பாகிஸ்தானில் பிறந்து இருந்தால் கிரிக்கெட் ஆட வாய்ப்பே பெற்றிருக்க மாட்டார் என்று தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமேஷ் ராஜா 30 வயதுக்கு மேல் அணியில் எந்த வீரரையும் அறிமுகம் செய்ய முடியாது என்ற விதி வகுத்திருந்தார் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran