Daily Horoscope
✕

“சூர்யகுமாருக்கு எங்க ஆதரவு எப்போதும் உண்டு…” ஆஸி. தொடரில் வாய்ப்பு குறித்து ராகுல் டிராவிட்!

Written By vinoth
Updated: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (07:26 IST)
கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அவர் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றிருக்கிறார். ஆனால் அவருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைப்பது அரிதுதான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று தொடங்கும் ஆஸி அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பளிப்பது பற்றி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

அதில் “எப்போதும் எங்களுடைய ஆதரவு அவருக்கு உண்டு. அவர் கண்டிப்பாக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்.” எனக் கூறியுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments