தொடர்புடைய செய்திகள்
- 277 ரன்கள் சேர்த்து ரோஹித் ஷர்மாவின் சாதனையை தகர்த்த தமிழக வீரர் ஜெகதீசன்!
- சிவசங்கர் பாபா வழக்கு: உத்தரவை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்
- நட்பு நாடுகளில் இந்தியாவுக்கு தான் முன்னிலை: அமெரிக்கா அறிவிப்பு
- திடீரென விலகிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்: புதிய கேப்டன் யார்?
- ஒரே நாளில் 406 பாதிப்புகள்; 12 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
விரைவில் அது நடக்கும் என நினைக்கிறேன்… அடுத்த லெவலுக்கு செல்ல ஆசைப்படும் சூர்யகுமார்!
கடந்த ஒரு வருடமாக சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட ஆட்டத்திறனில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் டி 20 போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.இப்போது டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளில் 111 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது டி 20 போட்டிகளில் அவரின் இரண்டாவது சதமாகும். இதன் மூலம் நேற்றைய ஆட்டத்தின் ஆட்டநாயகனாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது பேசிய அவர் “எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதுதான் ரொம்ப பிடிக்கும். விரைவில் அந்த கனவு நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.