1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (14:51 IST)

சுயநலமில்லாத வீரர்கள்தான் எனக்குத் தேவை… தொடர் வெற்றிக்குப் பின்னர் சூர்யகுமார் பேச்சு!

நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் வான வேடிக்கைக் காட்டி 297 ரன்கள் சேர்த்தனர்.  இது டி 20 போட்டிகளில் ஒரு அணி சேர்த்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரியான் பராக் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி 164 ரன்கள் மட்டுமே சேர்த்து 133 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னுடைய இன்னிங்ஸில் 11 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் விளாசினார். இது சர்வதேச டி 20 போட்டிகளில் அவர் அடிக்கும் முதல் சதமாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய சூர்யகுமார் யாதவ் ‘எனக்கு சுயநலமிக்க வீரர்களும் அணியும்தான் தேவை. நீங்கள் 49 ரன்களிலோ அல்லது 99 ரன்களிலோ இருந்தால் கூட அணிக்குத் தேவையென்றால் அடித்து ஆடும் வீரர்கள்தான் முக்கியம்.” எனக் கூறியுள்ளார்.