தொடர்புடைய செய்திகள்
- கடைசி நேர சொதப்பல்… இந்திய அணியுடன் அமெரிக்கா செல்லாத கோலி… என்ன காரணம்?
- உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!
- “உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!
- ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!
- “இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!
இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?
ஜூன் 1 ஆம் தேதி தொடங்கவுள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் மிக முக்கியமானதாக சமீபகாலமாக டி 20 போட்டிகளில் கலக்கி வரும் ரிங்கு சிங் பெயர் இடம்பெறாததுதான். அதே போல அணியில் நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அதுவும் தேவையில்லாதது என சொல்லப்பட்டது. இப்படி அந்த அணி மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த தொடரில் இந்திய அணிக்கான போட்டி ஜூன் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே அமெரிக்கா சென்றது. ஐபிஎல் ப்ளே ஆஃப் விளையாடியவர்கள் சற்று தாமதமாகவே சென்றனர். இந்நிலையில் விராட் கோலி மட்டும் தன்னுடைய தனிப்பட்ட வேலை காரணமாக இன்னும் அமெரிக்கா செல்லவில்லை.
இதை அவர் பிசிசிஐயிடம் தெரிவித்து அனுமதி வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து ஜூன் 1 ஆம் தேதி விளையாடுகிறது. அந்த போட்டியில் கோலி கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கோலி இம்மாத இறுதிக்குள் அமெரிக்கா சென்றுவிடுவார் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்