1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 27 மே 2024 (07:40 IST)

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்த சுனில் நரைன்!

கடந்த இரண்டு மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஐபிஎல் 17 ஆவது சீசன் நேற்றோடு முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதிய நிலையில் கொல்கத்தா அணி மிக எளிதாக வெற்றியைப் பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 113 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த இலக்கை 2 விக்கெட்கள் மட்டும் இழந்து 11 ஆவது ஓவரிலேயே எட்டி, மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைப் பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

கொல்கத்தா அணியில் 488 ரன்கள் மற்றும் 17 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய சுனில் நரேன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் தொடரில் அவர் மூன்றாவது முறையாக  தொடர் நாயகன் விருது பெறுகிறார். இது ஐபிஎல் தொடரில் எந்தவொரு வீரரும் படைக்காத சாதனையாகும். இதற்கு முன்னர் 2012 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளிலும் அவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.