தனியார் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
தனியார் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில்,எந்த ஒரு பயிற்சி மையமும் பட்டப்படிப்பை விட குறைவான தகுதிகளை கொண்ட ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது. பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்கும் குறைவான மாணவர்களை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்களை சேர்க்க தவறான உத்தரவாதங்கள் அளிப்பதும், ரேங்க் அல்லது நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதம் அளிக்க கூடாது.
பயிற்சியின் தரம், வசதிகள், பயிற்சி மையத்தால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் எந்தவொரு விளம்பரத்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிட கூடாது என்று தெரிவித்துள்ளது.