1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sunil gavaskar advise to Indian players practice more

ஹோட்டல் அறையில் நேரத்தை செலவிடாதீர்கள்… இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் அறிவுரை!

India vs Australia test series
அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை அடித்து குவித்தது. அந்த அண்யின் டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி சதமடித்தார்.

முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு வெறும் 19 ரன்கள்தான் என்று ஆனது. அதை ஆஸ்திரேலியா எளிதாக அடித்து வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு ஒரு அறிவுரையை சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதில் “இந்த போட்டி மூன்று நாட்களில் முடிந்துவிட்டதால் கூடுதல் நாட்கள் கிடைத்துள்ளன. அந்த நாட்களை ஹோட்டல் அறைகளில் செலவிடாமல் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இனிமேல் இதை மூன்று போட்டிகள் கொண்ட தொடராக நினைத்து விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கோவையில் கொண்டாட்டமாக நடைபெற்ற மண்டல அளவிலான ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்!