புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (13:23 IST)

பிக்பாஸ் வீட்டில் சச்சின் புகழ் பாடிய ஸ்ரீசாந்த்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரும் தற்போதைய மலையாள நடிகருமான ஸ்ரீசாந்த் சச்சின் குறித்து நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றைக் கூறியுள்ளார்.

இந்திய 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடந்த இருபது ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பைப் போட்டிகளில் கோப்பையை வென்றது. அந்த இரண்டு தொடர்களிலும் இடம்பெற்றிருந்தார் கேரள வீரர் ஸ்ரீசாந்த்.

அதையடுத்து ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியமும் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. அதையடுத்து அவர் தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் ஹிந்தி பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். அங்கே தனது ஹவுஸ்மேட்டிடம் கிரிக்கெட் வீரர் சச்சின் குறித்து உணர்ச்சிகரமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிறகு அணியின் அனைத்து வீரர்களையும் வைத்து ஒரு சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அனைத்து வீரர்களையும் பற்றி கூறிவிட்டு என் பெயரை மறந்து விட்டார். அப்போது சச்சின் எனது பெயரை குறிப்பிட்டு. ஸ்ரீசாந்த் உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று கூறினார். அதைக் கேட்டு அன்றிரவு முழுவதும் நான் அழுதுகொண்டே இருந்தேன்’ எனக் கூறியுள்ளார்.

அப்போது நடந்த இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு தற்போது சச்சினுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.