வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2022 (23:16 IST)

ஆசிய கோப்பை: இலங்கைக்கு அணி சூப்பர் வெற்றி!

asia cup
ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் லீக் சுற்று  நேற்றுடன் முடிந்தது இந்த நிலையில் இன்றுடன் சூப்பர் 4 சுற்றில் இலங்கை முதல் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே, முதலில் பேட்டிங் செய்யும் ஆஃகானிஸ்தான் அணியில், சாசை 13 ரன் களுடன் அவுட்டான நிலையில்,  குர்பாஷ் 84  ரன்களும், இப்ராஹிம் 40 ரன் களும், ஷாட்ரான் 17 ரன்களும், கன் 9 ரன் களும் அடித்தனர். எனவே  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து இலங்கைக்கு 176 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது இலங்கை அணியில், நிசங்கா 35 ரன்களும், மென்டிஸ் 36 ரன்களும், குண்திலகா 33 ரன்களும், ராஜபக்சே 31 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

எனவே, இலங்கை அணி  19.1  ஓவர்களில் 6  விக்கெட் இழப்பிற்கு 179   ரன்கள் எடுத்து,4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.