1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. New York nasao stadium will be dismantled

உலகக் கோப்பை போட்டிகளுக்காக 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மைதானம் இடிக்கப்படுகிறதா?

அமெரிக்கா
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவின் நாசாவ் மைதானத்தில் 8 போட்டிகள் வரை நடத்தப்பட்டன. ஆனால் இந்த மைதானத்தின் தன்மை மிகவும் மோசமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் ரன்களே சேர்க்க முடியாத இக்கட்டுக்கு ஆளாகினர்.

இதனால் இந்த மைதானத்தில் நடந்த போட்டிகள் எல்லாம் ரசிகர்களுக்கு முழுமையான பார்வை அனுபவத்தைக் கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்த மைதானத்தின் போட்டிகள் முடிந்த நிலையில் அந்த மைதானம் முழுவதும் இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மைதானம் உருவாக்கப்பட்ட போதே தற்காலிக மைதானமாகதான் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்க 75 நாட்களும் இந்திய மதிப்பில் 250 கோடி ரூபாய் பணமும் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
3 போட்டிகளாக எந்த பங்களிப்பும் செய்யாத ரவீந்தர ஜடேஜா… என்ன ஆச்சு இவருக்கு?