விராட் கோலி 'சீண்டுகிறார்’ என ஹோட்டல் மேலாளரிடம் புகாரளித்த இலங்கைப் பெண்

விராட் கோலி 'சீண்டுகிறார்’ என ஹோட்டல் மேலாளரிடம் புகாரளித்த இலங்கைப் பெண்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (14:56 IST)
ஹோட்டல் மேலாளரிடம் சென்று, ’இந்திய இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறார்’ என்று விராட் கோலி குறித்து முறையிட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதற்கிடையில் இந்திய அணி வீரர் விராட் கோலி ஹோட்டல் ஒன்று சென்றுள்ளார்.
 
அப்போது பெண் ஒருவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக, அந்த பெண்ணின் கணவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
 
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த தர்ஷிகா திஸநாயகே என்னும் பெண், சம்பவத்தன்று தான் தங்கியுள்ள ஹோட்டலில் காலை உணவு உண்ணச் சென்றுள்ளார்.
 

 
அப்போது அங்கு வந்துள்ள விராட் கோலியின் முகாமையாளர் [ஏஜெண்ட்] புகைப்படம் எடுக்க வந்திருப்பதாக கருதி, “காலை உணவின் போது முடியாது?” எனத் தெரிவித்துள்ளார்.
 
இதனால் குழப்பமடைந்த அந்த பெண், ”என்ன காலை உணவின்போது முடியாது?” எனக் கேட்டுள்ளார்.
 
இதற்கு கோலியின் முகாமையாளர் “புகைப்படங்கள் எடுக்க இல்லையா?” என மீண்டும் கேட்டுள்ளார். 
 
அதற்கு இலங்கைப் பெண் “புகைப்படமா? யாருடன்?” எனக் கேட்டுள்ளார்.
 
இதன்போது குறுக்கிட்ட கோலி, “இல்லை, நீங்கள் என்னுடன் புகைப்படம் எடுக்க வருவதாக நினைத்துக் கொண்டார்” எனக் கூறியுள்ளார்.
 
இதற்கு பதிலளித்துள்ள இலங்கைப் பெண் “நான் ஏன் உங்களுடன் புகைபடம் எடுத்துக்கொள்ள வேண்டும்?” எனக் கேட்டுள்ளார். அப்போது கோலியின் முகம் அதிர்ச்சியில் உறைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மேலும் அந்த இலங்கைப் பெண் கோலியைப் பார்த்து “நீங்கள் யார்?.. இல்லை நீங்கள் ஏதேனும் என்ன பிரபலமானவரா..? “ எனக் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த விராட் கோலியும், அவரது முகமையாளரும் ’எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளனர்.
 
இதோடு மட்டுமல்லாமல், ஹோட்டலின் மேலாளரிடம் சென்று, ’இந்திய இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறார்’ என்றும் முறையிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :