செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2022 (10:30 IST)

பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்த இலங்கை அணி… கடைசி நாளில் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரண்டாவது போட்டியை பாகிஸ்தான் வென்றது. இதையடுத்து நடந்து முடிந்த மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 378 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 360 ரன்கள் எடுத்து இலங்கை அணி டிக்ளேர் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான் அணி 508 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நிலையில் 261  ரன்கள் மட்டுமே சேர்த்து போட்டியில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்துள்ளது.