1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (15:11 IST)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 508 ரன்கள் இலக்கு

pak vs sri
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 508 ரன்கள் இலக்கு
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது
 
 இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 360 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல் இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான் அணி 508 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது விளையாடி வருகிறது 
 
சற்று முன் வரை பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது இன்னும் வெற்றிக்கு தேவை 437 ரன்கள் தேவை என்று இருக்கும் நிலையில் இன்று 4வது நாள் நடைபெற்று வருகிறது 
 
இந்த இலக்கை பாகிஸ்ஹான் எட்டுமா அல்லது பாகிஸ்தான் விக்கெட்டுகளை இலங்கை வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.