1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. South Africa team struggling with aussie bowling in second innings also

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்… இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

முன்னதாக முதல் இன்னிங்ஸிஸ் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 189ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து இப்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இப்போது 212 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த நியூசிலாந்து.. கேன் வில்லியம்ஸ், டாம் லாத்தம் அபார சதம்!