1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (08:45 IST)

சீன பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை; தாராளமாக வரலாம்! – ஆஸ்திரேலியா முடிவு!

சீனாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் சீன பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகளில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சீனாவோ கட்டுப்பாடுகளை தளர்த்தி கொரோனா பரவலிலும் இயல்பு வாழ்க்கைக்கு தயாராகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சீன பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் விதிகளில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், சீன பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டாலும், தொடர்ந்து கொரோனா நிலவரத்தை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K