திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஆகஸ்ட் 2022 (08:47 IST)

கங்குலி தலைமையில் உலக ஜெயிண்ட்ஸ் அணியோடு மோதும் இந்தியா மகாராஜாஸ் அணி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான போட்டி நடக்க உள்ளது.

இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் சவுரவ் கங்குலி. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து தற்போது பிசிசிஐ தலைவராக கடந்த 3 ஆண்டுகள் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் தலைமையில் இந்திய வீரர்கள் விளையாடும் போட்டி ஒன்று ஏற்பாடு ஆகியுள்ளது. இந்தியன் மகாராஜாஸ் என்ற அவரது அணிக்கும் உலக ஜெயண்ட்ஸ் அணிக்கும் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி கொல்கத்தாவில் போட்டி நடக்க உள்ளது.

இந்தியா மகாராஜாஸ் அணி:
சௌரவ் கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுஃப் பதான், பத்ரிநாத், இர்ஃபான் பதான், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, பிரக்யான் ஓஜா, அசோக் டிண்டா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜொஹிந்தர் சர்மா, ரிதீந்தர் சிங் சோதி.

உலக ஜெயிண்ட்ஸ் அணி:
லெண்டல் சிம்மன்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூரியா, மேட் பிரயர், நேதன் மெக்கல்லம், ஜாண்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஹாமில்டன் மசகட்சா, மோர்டசா, அஸ்கர் ஆஃப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீல், கெவின் ஓ பிரயன், தினேஷ் ராம்டின்.